உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ட்விட்டரின் முழுப் பங்குகளையும் வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அவர் 44 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளார்.
அண்மையில் அவர் ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கினார்.
எலான் மஸ்க் ட்விட்டரின் தற்போதைய தலைவரான பிரட் டெய்லருக்கு இந்த திட்டம் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
ட்விட்டர் சமூக ஊடக வலையமைப்பை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.