நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நேற்று (05) பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது இலக்க தகடு இல்லாத நான்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் கருப்பு ஆடை, முகமூடி அணிந்து அங்கு பிரவேசித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இராணுவபேச்சாளர், அவர்கள் அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் காவல்துறையால் முறையற்ற வகையில் நடத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபரிடம் இராணுவ தளபதி கோரி இருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறையினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்தசம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளது.