ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த தகவலை வழங்கினார்.
முன்பிருந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னர், மீண்டும் நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முக்கியத் தீர்மானங்களை எடுக்கும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
