பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (03) காலை 11.30 மணியளவில் கூடியது.
அதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதுடன், இது அரசியலமைப்பு சட்டத்தின் 5 ஆம் பிரிவுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது.