சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இந்த ஆண்டுக்கான IPL தொடரின் முதலாவது போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் மொயின் அலி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் இந்தியாவுக்கு பயணிப்பதற்கான வீசாவைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் இங்கிலாந்திலேயே தங்கி இருக்கிறார்.
அதேநேரம் IPL போட்டிகளில் பங்கேற்க மூன்று நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய வேண்டிய கட்டாய விதியும் இருக்கின்றது.
எனவே அவர் இந்த போட்டியில் பங்கு பெறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் டெவோன் கொன்வே இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது