சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடன் தொகை, பயன்படுத்தப்படவுள்ள விதம் குறித்து, நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இதன்படி 2.5 பில்லியனில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் எல்லை வசதியில், மூலப்பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
மீதி 1 பில்லியன் டொலர், வெளிநாட்டு நாணய சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்படும்.
எவ்வாறாயினும், சீனா இன்னும் இந்த கடனை வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.