இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதனால் பல இடங்களில் குழப்பங்கள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.