Thursday, April 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் நெருக்கடியால் 3 தூதரகங்களுக்கு பூட்டு

டொலர் நெருக்கடியால் 3 தூதரகங்களுக்கு பூட்டு

டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்களையும், தூதரக ஆலோசகர் அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இலங்கை தூதரக ஆலோசகர் அலுவலகம் ஆகியவை இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக மீதமுள்ள 60 தூதரகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles