டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்களையும், தூதரக ஆலோசகர் அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இலங்கை தூதரக ஆலோசகர் அலுவலகம் ஆகியவை இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக மீதமுள்ள 60 தூதரகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.