Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்ராலை பதவி விலக கோரினாரா ஜனாதிபதி?

கப்ராலை பதவி விலக கோரினாரா ஜனாதிபதி?

மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணித்துள்ளதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது,

IMF தூதுக்குழு, அதிகாரிகள் தொடர்பில் விவாதிக்கவில்லை என்பதுடன், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் நிதி விவகாரங்கள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன.

இதுபோன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக தனது அனைத்து முக்கியப் பணிகளையும் தொடர்ந்து செய்யுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles