சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த தொகையினை செலுத்துவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதா? அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த எரிவாயு தாங்கிய கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய களஞ்சியசாலையில் கையிருப்பு இல்லாமை காரணமாக எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் முன்னதாக இடைநிறுத்தியிருந்தன.