Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்சினைப்பை நீர்க்கட்டி: தவிர்க்க வேண்டிய உணவுகள்

சினைப்பை நீர்க்கட்டி: தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.

உட்கொள்ள வேண்டிய உணவுகள்:

  • 1.முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், அவரை, தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் ப்ரொக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் அனைத்து வகையான கீரைகளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்
  • 2.பப்பாளி, கொய்யா, ஆப்பிள், தோடம்பழம், கிரணி, செர்ரி,ஸ்ட்ரோபெரி போன்ற பழங்கள் மற்றும் சிறிதளவு மாதுளை
  • 3.முளைக்கட்டிய பயறு, பருப்பு வகைகள், கடலை வகைகள்
  • பாதாம், பேரீச்சம்பழம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது
  • 4.கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பனீர், தயிர், நீர் மோர்
  • 5.கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசி, ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு போன்ற சிறுதானியங்கள், கோதுமை மற்றும் பார்லி.
  • 6.சிறிதளவு கோழியிறைச்சி அல்லது மீன் வாரத்தில் இரண்டு நாட்களும் , தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  1. 1.கோதுமை மா, சீனி, பாண், பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோதுமை
  2. 2.கொழுப்புள்ள பால், தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய்
  3. 3.மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம்
  4. 4.கிழங்கு வகைகள்
  5. 5.முந்திரி, திராட்சை, பிஸ்தா. செயற்கை பழபாகுகள், அனைத்து வகையான 6.குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் வெதுப்பக உணவுகள்
  6. 7.எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள்.
  7. 8.பதப்படுத்தப்பட்ட அசைவ மற்றும் சைவ உணவுப் பொருட்கள்

உணவுப் பழக்கத்தில் இவற்றை பின்பற்றுவதுடன் உடற்பயிற்சியையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தினமும் நாற்பது நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி போதுமானதாகும். இதுபோன்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைகளுக்கு ஆங்கில மருத்துவத்தைப் போலவே மாற்று மருத்துவத்திலும் மிகச் சிறந்த தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது.

பிசிஓடி என்பது ஒரு நோயல்ல. மரபணு குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடுவதும் அவற்றை சரி செய்து கொள்வதும் முழுக்க முழுக்க நம் கைகளில் தான் இருக்கின்றது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய உடலை கவனித்துக்கொள்வதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கி கவனித்துக் கொள்ளும் பொழுது தம்முடைய உடல்நலம் மட்டுமல்லாமல் குடும்பத்தின் நலனும் பாதுகாக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles