Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்உடல் எடை குறைப்புக்கு உதவும் கொழுப்பு குறைந்த உணவுப் பழக்கம்

உடல் எடை குறைப்புக்கு உதவும் கொழுப்பு குறைந்த உணவுப் பழக்கம்

உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் உணவு முறைகளில் ‘குறைந்த கொழுப்பு உணவுப் பழக்கம்’ முக்கியமானதாகும்.

‘இதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கு, சராசரி உணவின் கொழுப்பு அளவு குறைக்கப்பட வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

30 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான கலோரிகள் கொண்ட உணவு வகைகளே குறைந்த கொழுப்புள்ள உணவுகள் எனப்படுகின்றன. உலக அளவில் பல ஆய்வுகள், இதய செயல் இழப்புக்கும், மக்களின் உணவு முறைக்கும் அதிக தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.

ஒரு உணவு 100 கலோரிகளை அளித்து, அதில் 3 கிராம் அல்லது அதற்கும் குறைவான கொழுப்பு இருந்தால், அது குறைந்த கொழுப்புள்ள உணவாகும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், முட்டையின் வெள்ளைக்கரு, தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் வான்கோழி இறைச்சி, பீன்ஸ், பருப்பு, பட்டாணி, கடல் உணவுகள் மற்றும் கொழுப்பு நீக்கிய பால் போன்றவை குறைந்த கொழுப்புள்ள உணவுப் பொருட்களாகும்.

ஆரோக்கியத்துக்கு கொழுப்புச்சத்து அவசியமானது. அதே சமயம் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

பாலி அன்சாச்சுரேட்டட், மோனோ சாச்சுரேட்டட், டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் என உணவில் நான்கு வகைக் கொழுப்புகள் காணப்படுகின்றன. இந்த வெவ்வேறு வகையான கொழுப்புகள் ஒவ்வொரு கிராமுக்கும் ஒன்பது கலோரிகளை வழங்குகின்றன.

குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, நம் உடலின் தேவைக்கும் அதிகமான அளவு கொழுப்பை பெற்றுக் கொள்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம், உடலில் ஆங்காங்கே கொழுப்பு படிவது குறைவடைகிறது.

இதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், உடல் பருமனால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, குழந்தையின்மை, இதய நோய் மற்றும் பல வாழ்வியல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
மேலும், உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் குறைந்த கொழுப்பு உணவுப் பழக்கம் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles