நாவுல – எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) காலை 10.30 அளவில் நாவுல – எலஹெர வீதியில் பயணித்த வாகன மொன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.