செய்திகள்விளையாட்டுஇலங்கை கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூதவுடல் பவனியாக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles