வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், டொலர் தட்டுப்பாடும் அதனை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலை காரணமாக புதிய கடனட்டைகள் முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் காலாவதியான அட்டைகளுக்கான புதிய அட்டை என்பவற்றை பெற்றுக் கொள்வதில் மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன், குறித்த மைக்ரோ சிப் வகைகளை இலங்கையில் தயாரிக்க முடியாது எனவும், உரிமம் பெற்ற நிறுவனங்களினால் மாத்திரமே அவற்றை தயாரிக்க முடியும் என லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதி வரையில் நாட்டில் 2,171,348 கடனட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 17,696,356 ஏடிஎம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.