முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சிவப்பு நிற சால்வையை அணியாமல் இன்று (05) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
கடந்த காலங்களில் சால்வையுடன் வந்த அவர், இன்று அதை அணியாமல் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
நாடாளுமன்ற அமர்வுகளை நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபை அமர்வில் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார்.
இந்த கோரிக்கையை மறுத்த...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 4 மாதங்களின் பின்னர் இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
அவர் வெளிநாடொன்றுக்கு...
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்த முக்கிய தீர்மானங்களை எடுக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மக்கள் ஆணையொன்றின் ஊடாகவே தாம் ஆட்சிக்கு வர விரும்புவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைக்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வினை காண வேண்டும்...
நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த எஸ்.எம்.எம்.முஷாரப்பிடம், சாணக்கியன் பணத்தை வழங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரிடம் சாணக்கியன் 5000 ரூபாவை கையளித்தார்.
இதையடுத்து, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த பணத்தை வழங்குமாறு முஷாரப் பதிலளித்தார்.
அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 14 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 பேரும் மற்றும் விமல் வீரவன்ச தரப்புடன் இணைந்த 10 கட்சிகளின்...
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று (05) நாடாளுமன்றம்ம் ஆரம்பிக்கும் போதே விசேட அறிக்கையொன்றை சமர்பித்தார்.
இதுவரை எந்த அமைச்சரும் சட்டரீதியாக பதவி விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த அமைச்சரும் சட்டப்படி பதவி...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டது.
அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியின் விளைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி...