Thursday, September 19, 2024
28 C
Colombo

விளையாட்டு

பமிலியன்ஸ், கே.கே.எஸ் அணிகள் கிண்ணம் வென்றது

March 1, 2022 - 6:00amவிளையாட்டுயாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தினால் வருடத்தம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 2020/21ஆண்டுக்கான ரவ்பாயேல் மகாராஜா வெற்றிக் கிண்ணத்துக்கானகூடைப்பந்தாட்டத்தொடரில்பெண்கள் பிரிவில் பமிலியன்ஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது. குறிந்த தொடர் பழைய பூங்காவில் அமைத்துள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந் தாட்டதிடலில் (26) திகதி சனிக்கிழமை 6.30 மணிக்கு மின் ஒளியில் இடம் பெற்றது.இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதிக் கொண்டன.இதில் பமிலியன்ஸ் 44 :40 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.கே.எஸ் அணி மோதிக்கொண்டன. இதில் கே.கே.எஸ் விளையாட்டுக்கழகஅணி65 :53 என்றபுள்ளிஅடிப்படையில் வெற்றி பெற்றது. (யாழ்.விளையாட்டு நிருபர்) Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

ஆறுதல் வெற்றி அல்லது வைட் வொஷ்; இன்று இறுதி ஆட்டம்

February 10, 2017 - 2:18amவிளையாட்டு  தென்னாபிரிக்கா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 3--0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2--1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாபிரிக்கா கைப்பற்றி இருந்தது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4--0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. தென்னாபிரிக்கா இந்த ஆட்டத்திலும் வென்று வெள்ளைச்சலவை செய்யும் ஆர்வத்தில் உள்ளது.  Share

ரஷ்ய அஞ்சலோட்ட பெண்கள் அணியின் பதக்கம் பறிப்பு

February 3, 2017 - 2:00amவிளையாட்டு  2012-ம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டில் இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்லோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.  Share

இலங்கை இன்று பதிலடி கொடுக்குமா?

February 1, 2017 - 4:00amவிளையாட்டு  தென்ஆபிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ் பர்க்கில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்ஆபிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் வென்றன. 5 ஒருநாள் போட்டித் தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தென்ஆபிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டேர்பனில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் போட்டியிலும் வெல்லும் ஆர்வத்தில் தென்ஆபிரிக்கா உள்ளது.  Share

Popular

Latest in News