Saturday, August 2, 2025
27.2 C
Colombo

செய்திகள்

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரொஷான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவரின் உறவினரான ஆலோக ரணசிங்க என்பவரே ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்த சம்பளம் 1,700 ரூபா – சம்பள நிர்ணய சபை உறுதி

தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. அந்த...

மூன்றாவது முறையாக சமரிக்கு கிடைத்த அங்கீகாரம்

ஜூலை மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனையாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகளான ஸ்மித்ரி மந்தனா மற்றும்...

ஒக்டோபர் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களின் இடைக்கால மாதாந்த கொடுப்பனவான 3,000 ரூபா, ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் சம்பள முரண்பாடுகளை சரிசெய்யும் வரை கடந்த ஏப்ரல் மாதம்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 26,889 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை...

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப்பிரமாணம்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம்...

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு 566.8 மில்லியன் டொலர்கள்

2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களால் 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த 7 மாதங்களில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வியாழனன்று (15) விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியான எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். சுமார் 1500...

சுதர்ஷனியின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிபுணர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தீர்மானித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1700 ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பில் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இறுதித் தீர்மானத்தை வழங்கவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம்...

Popular

Latest in News