Wednesday, July 23, 2025
28.4 C
Colombo

செய்திகள்

யுக்ரைன் செல்கிறார் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார். நேற்று போலந்து சென்றுள்ள மோடி நாளை யுக்ரைன் செல்ல உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. யுக்ரைன் செல்லும் இந்திய பிரதமர்...

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன

ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து நிறுவனமொன்றில் பாரிய வெடிவிபத்து: 17 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றதுடன், இதில் 33 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

35 நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கை வர இலவச விசா

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும்...

ரொனால்டோவின் யூடியூப் சேனல் படைத்த சாதனை

பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஆரம்பித்து 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது. UR.Cristiano என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேனல் 90...

இன்றைய வானிலையில் மாற்றம்

நாட்டில் தற்போதுள்ள மழையுடனான காலநிலை இன்று (22) முதல் குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது...

தலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன!

தலதா அத்துகோரளவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழு தலைவராக அவர் பணியாற்றி வருகிறார். ஐக்கிய...

2005 இல் செய்த தவறை மீண்டும் செய்யாதீர் – விஜயகலா மகேஸ்வரன்

2005 இல் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

முன்பள்ளி சிறுமிகள் வன்புணர்வு: இந்தியாவில் வெடித்த போராட்டம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர் நகரில் முன்பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 3 மற்றும் 4 வயதுடைய இந்த இரண்டு சிறுமிகளும், முன்பள்ளியை...

வடிவேல் சுரேஷ் – அலி சாஹிர் மௌலானாவுக்கு புதிய பதவிகள்

தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

Latest in News