Sunday, July 20, 2025
28.4 C
Colombo

செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்தது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளது. இதன்படி 1,052 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த...

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க தீர்மானம்

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த...

இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் நியமனக்...

சுவிஸில் இருந்து வந்த நபர் சடலமாக மீட்பு

வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த நபரொருவரின் சடலம் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, நெடுங்கேணி, வெடிவெட்டக்கல்லுவைச் சேர்ந்த 66 வயதுடைய செல்லதுரை நிமலநாதன் என்பவரே இவ்வாறு...

கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்த 5 வயது சிறுவன்

ஆசியாவிலேயே குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (27) பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பதுளை, அம்பாறை...

அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இலத்திரனியல் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளின் கையிருப்பைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத...

தேர்தல் சட்டத்தை மீறிய இருவருக்கு அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறி கொழும்பு அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் உள்ள மின்கம்பங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (26) இந்த...

குளவி தாக்குதலுக்கு இலக்காகி நால்வர் வைத்தியசாலையில்

ஹட்டன் - ஷெனன் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (26) இத்தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை கிளறிவிட்டுள்ளதுடன்,...

சுதந்திர கட்சியின் பலமான செயற்பாட்டாளர்கள் குழு ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று ஆதரவு வழங்கியுள்ளது. ஆதரவு தெரிவிக்கும் குழுவினர் இன்று (26) காலை மல்பாறையில் உள்ள ஜனாதிபதி...

Popular

Latest in News