Tuesday, May 19, 2026
30 C
Colombo

செய்திகள்

பொரளை தேவாலய குண்டு விவகாரம்: வைத்தியர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் 14 வரை நீடிப்பு

March 1, 2022 - 3:24pmஉள்நாடுபொரளை புனித பரிசுத்தவான் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான வைத்தியர் உள்ளிட்ட 3பேரினது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.  பொரளை புனித பரிசுத்தவான் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் ஜனவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.  Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

மக்களை சாகடிக்கும் பயங்கரவாத சட்டம் ஏன்?

March 1, 2022 - 4:26pmஉள்நாடுதமிழ் மக்களை சாகடிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டனர். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

ரஷ்யாவுக்கு ஆதரவாக யுக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் யுக்ரைனின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் யுக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 168 பேர் குணமடைந்தனர்

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 168 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் சுகாதார சேவையாளர்கள்!

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.கடந்த...

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றம்

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது.அத்துடன், ரஷ்யாவின் கால்பந்தாட்ட அணிகளுக்கு சர்வதேச போட்டிகளில் மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம மற்றும் ஃபீஃபா என...

யுக்ரைன்-ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் பலி!

யுக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கார்கீவ்...

நெஸ்லே – மைலோ நீர்கொழும்பில் கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாம்

March 1, 2022 - 3:52pmவிளையாட்டுசிறுவர்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு அவர்களுக்கு ஊட்டமளிக்கும் நெஸ்லே - மைலோ, இலங்கை கரப்பாந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ஆசிய மத்திய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில், கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. 'விளையாட்டு ஒரு சிறந்த ஆசிரியர்' என்ற நெஸ்லே- மைலோவின் நம்பிக்கைக்கு இணங்க, இந்த கடற்கரை கரப்பந்தாட்ட முகாம் வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் குறித்த பயிற்சியை வழங்கியது. மாணவர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவாக நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலைகளுக்கு கடற்கரை கரப்பந்தாட்ட உபகரணங்களை வழங்கி இந்நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த உபகரணங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் வழங்கி வைத்தனர் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.அதற்கமைய, 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், குறித்த இருவரையும்...

லண்டனில் கைதான நெப்போலியன்; இலங்கைக்கு கொண்டு வரும் திட்டம் இதுவரை இல்லை

March 1, 2022 - 2:22pmஉள்நாடுநீதியமைச்சர் அலிசப்ரி கருத்து வெளியீடு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நெப்போலியன் என்று அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸை நாடு கடத்துவது பற்றி இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கில், லண்டனில் கடந்த 22ஆம் திகதி நெப்போலியன் கைதானார். போர்க்குற்ற எதிர்ப்புப் பொலிஸாராலே அவர் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.அவரைச் சர்வதேச பொலிஸார் ஊடாகக் கைது செய்யும்படியும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட நெப்போலியன் நாடு கடத்தப்படுவாரா என்று நீதி அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அவர் கைது செய்யப்பட்ட தகவலை ஊடகங்களில் பார்த்தேன். அவரை இலங்கைக்கு நாடு கடத்துவது பற்றி இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார்.   Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

Popular

Latest in News