நேற்றிரவு, பொதுமக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் முறைகேடாக சம்பாதித்து கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல சொத்துக்களை தீக்கிரையாக்கினர்.
அத்துடன், நீர்கொழும்பில் உள்ள Avenra, Bayfont, Grandeza ஆகிய ஹோட்டல்களும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு...
சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
நேற்று ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ்வாறு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய சகல துறைகளையும்...
நாடாளுமன்ற அமர்வை அவசரமாக கூட்டுமாறு,ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அவர் கோரியுள்ளார்.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 218 பேர்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசமாக செயற்பட்டதால்...