ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு சென்றமையை இலங்கையின் வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு விமானத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கம் கோரியமைக்கு அமைய அவருக்கான விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலைதீவு நோக்கி இன்று (13) அதிகாலை சென்றமை உறுதியாகியுள்ளது.
