Thursday, October 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த, பசில், கப்ரால் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி மனு

மஹிந்த, பசில், கப்ரால் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி மனு

மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு பயணத்தடை விதிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரின் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேரணையில் கோரப்பட்டுள்ள பயணத் தடை ஜூலை 14 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles