Sunday, May 25, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி விலகிய பின், பிரதமரின் பணி

ஜனாதிபதி விலகிய பின், பிரதமரின் பணி

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு வினவப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் தமது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் கூறியிருந்தார்.

பின்னர் அந்த தகவல் தவறுதலானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles