முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
முன்னாள் அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் Mbai முனையத்திற்கு வந்ததையடுத்து, அங்கு பணிபுரியும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளை விட்டு விலகியதாகவும், இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பியதாகவும் தெரியவருகின்றது.



