Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்தில் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஜூலை 09 ஆம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிய அவர், பொலிஸ் சீருடை மற்றும் காலணிகளை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் காலிமுகத்திடலில் தங்கியிருந்தமையினால் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றார்.

எனினும், பொலிஸ் தலைமையகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles