Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசவேந்திரவுக்கு மஹிந்த அவசர கடிதம்

சவேந்திரவுக்கு மஹிந்த அவசர கடிதம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜூலை 13 வரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கவனச்சிதறல்களை பயன்படுத்தி கொழும்பில் படைகளை நுழைக்க முயற்சிப்பதாக பரவும் செய்தி பொய்யாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

குடியரசு மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பின் பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள்,இந்த நேரத்தில் அமைதியாக இருக்கும் பதின்வயதினர் இளைஞர்கள் மற்றும் பிற குடிமக்களுக்கு எதிராக அதிகாரத்தையும் பாதிப்பையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

அத்துடன் சில தரப்பினர் இந்த இடங்களுக்கு சிவில் உடையில் வந்து மே 09 போன்று தாக்குதல் நடத்த முயற்சித்தால், இவ்வாறான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles