Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட 17 மில்லியன் ரூபா நீதிமன்றுக்கு

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட 17 மில்லியன் ரூபா நீதிமன்றுக்கு

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் காவல்துறையிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா தொடர்பில் இன்று நீதிமன்றிற்கு அறியப்படுத்தப்படவுள்ளது.

நேற்று முன்தினம் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியனவற்றிற்குள் பிரவேசித்திருந்தனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையில் இருந்த ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சிலர் மீட்டதுடன், அதனை உரிய வகையில் கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பணத்தை இன்றைய தினம் நீதிமன்றில் பாரப்படுத்துவதற்கும் அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles