இன்று தமக்கு 1,500 முதல் 2,000 வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தாங்களுக்கு பல பேருந்து டிப்போக்களில் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இன்றையதினம் போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
குறைந்தது 25 சதவீத பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
கடந்த 3, 4 நாட்களுக்கு மேலாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.