Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்கள் - செவ்வாய் மின்வெட்டு அமுலாகும் விதம்

திங்கள் – செவ்வாய் மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்று மற்றும் நாளை மறுதினங்களில் தலா 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles