இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை தமக்கு வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இருவருக்கிமிடையிலான சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது,
இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்கள் தொடர்பில் அறியத்தருமிடத்து தமது பொருளாதாரக் கொள்கைகளின் போது அதற்கு முன்னுரிமை வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.