தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த இதனை தெரிவித்தார்.
தனியார் மருந்தக வாகனங்கள் மற்றும் மருந்து விநியோக நிறுவன வாகனங்களையும் அத்தியவசிய சேவையாக கருதி எரிபொருளை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.