நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் திறக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாக எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பொதுச் சேவைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.