2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கை ஏற்றுமதியிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளது..
இலங்கை சுங்கத் தரவுகளின்படி மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இது முக்கியமாக ஆடை மற்றும் ஜவுளி, தேங்காய் அடிப்படையிலான பொருட்கள் மற்றும் மின் மற்றும் மின்னணு கூறுகளின் ஏற்றுமதியின் வருவாய் அதிகரிப்பு காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது