Wednesday, October 29, 2025
28.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபந்துலவுக்கு புதிய அமைச்சுப் பதவி

பந்துலவுக்கு புதிய அமைச்சுப் பதவி

எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்கவும் செல்லவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இரண்டு இலங்கை பிரதிநிதிகள் ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ரஷ்யா விஜயம் காரணமாக, பதில் கல்வி அமைச்சர் பதவி போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய அமைச்சராக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles