Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் மீண்டும் பொது முடக்கம்?

நாட்டில் மீண்டும் பொது முடக்கம்?

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவு கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.

இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் தற்போது 1,100 டன் பெற்றோல் மற்றும் 7,500 டன் டீசல் மட்டுமே உள்ளது.

இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை.

விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles