Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டினுள் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் BA 5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொவிட் 19 வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles