Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேறு நிறுவனங்களிடம் கைமாறும் CPC

வேறு நிறுவனங்களிடம் கைமாறும் CPC

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

1,690 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அவற்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற முன்மொழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்படும்.

கடன் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு தங்கள் நிறுவனங்களிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles