Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் 45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் அபாயம்

எதிர்காலத்தில் 45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் அபாயம்

எதிர்காத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள், நிர்மாணம், விவசாயம் ஆகிய துறைகளின் தொழில்வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இன்னும் தீவிர நெருக்கடி நிலை ஏற்படவில்லை. தற்போது பெற்றோல், டீசல் எரிவாயு என்பவற்றுக்கான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும்? எனவே அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles