Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பலி

எரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பலி

அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles