Thursday, December 11, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலுடன் வர்த்தகர் கைது

5 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலுடன் வர்த்தகர் கைது

ஹோமாகம, மாக்கும்புர பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான டீசல் தொகை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு 500 லீட்டர் தண்ணீர் கொள்கலன்களில் 1000 லீட்டர் டீசலும், 200 லிட்டர் பீப்பாய்களில் 400 லீட்டர் டீசலும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த டீசல் தொகை வீட்டின் மேல்மாடியில் உள்ள பிளாஸ்ரிக் நீர் தொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles