கடதாசி தட்டுப்பாடு மற்றும் CEB எதிர்நோக்கும் நிதி நெருக்கடி காரணமாக மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நீர் கட்ட பட்டியலுக்கு பதிலாக, சிறிய பற்றுச்சீட்டொன்றை வழங்க நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே குழுவொன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.