இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்த குழுவினர் விசேட விமானத்தின் ஊடாக இன்று(23) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த குழுவில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனும் அடங்குவதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் நோக்கில் இந்த குழு இலங்கை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.