மே 9 சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
அதற்கமைய, இன்று வழக்கு விசாரணையின் போது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.