Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ - லாஃப்ஸ் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ – லாஃப்ஸ் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு

வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ள போதிலும் டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இறக்க முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லிட்ரோ எரிவாயு விநியோகம் தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு இருப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், விரைவில் குறித்த விநியோகமும் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லாஃப்ஸின் எரிவாயு விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக, தமது நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை இறக்கி விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு எரிவாயு இல்லையென லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles