Monday, May 5, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றை தாக்கிய கடதாசி தட்டுப்பாடு

நாடாளுமன்றை தாக்கிய கடதாசி தட்டுப்பாடு

அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செலவினம் அதகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் அரச நிறுவனங்களின் அறிக்கை 3 மொழிகளிலும் 12 பக்கங்களை கொண்டதாக அமையவுள்ளது.

முன்னர் ஒரு மொழியில் தலா 300 புத்தகங்கள் படி 3 மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles