எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்த நபரொருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எரிபொருள் வரிசையில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வருகைத்தந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.