Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்ய பிரஜையால் ரணகளமான எரிபொருள் நிலையம்

ரஷ்ய பிரஜையால் ரணகளமான எரிபொருள் நிலையம்

ஹப்புத்தளை நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தற்சமயம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles